ரயில்வே துறையில் பணி புரிவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பினை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB) அறிவித்துள்ளது. சமீபத்திய இந்த அறிவிப்பில் டெக்னீசியன் பணிகளுக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக வெளியாகி உள்ளது. இப்பணியில் சேர தகுதியானவர்கள் உடனே சென்று அதிகாரப்பூர்வமான இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த ஆண்டிற்கான விண்ணப்ப பதிவு ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை மாதம் 28ஆம் தேதி இன்று அறிவித்திருந்த நிலையில், தற்போது விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி வரை உங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
இப்பணியில் சேர்வதற்கு நீங்கள் தகுதி உடையவர்களா என்பதனை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பின்பு பதிவேற்றம் செய்யவும். www.rrbchennai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அறிவிப்பினை தெரிந்து கொள்ளவும்.
அமைப்பு | ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) |
காலியிடங்களின் எண்ணிக்கை | 6238 |
தேர்வு முறை | ஆன்லைன் தேர்வு |
தொடக்க தேதி | 28-06-2025 |
கடைசி தேதி | 07-08-2025 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் விண்ணப்பம் |
வேலை | மத்திய அரசு |
காலியிடங்கள் மற்றும் பதவியின் விவரங்கள்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பின்வரும் பணியிடங்கள் மற்றும் எந்தெந்த பணியிடத்திற்கு எத்தனை காலியிடங்கள் என்பதனை காணலாம்.
- டெக்னீஷியன் கிரேடு – I (சிக்னல் துறை) – 183
- டெக்னீஷியன் கிரேடு – III – 6055
வயது வரம்பு
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு இந்திய அரசு நிர்ணயித்துள்ள சில விதிகளின்படி வயதில் தளர்வுகள் வழங்கப்படும்.
- டெக்னீஷியன் கிரேடு – I (சிக்னல்) – 18 முதல் 33 வயது
- தொழில்நுட்ப வல்லுநர் தரம் – III – 18 முதல் 30 வயது
சம்பள விவரங்கள்
டெக்னீஷியன் கிரேடு – I (சிக்னல்) – நிலை 5 ரூ.29200/-
தொழில்நுட்ப வல்லுநர் தரம் – III – நிலை 2 ரூ.19900/-
விண்ணப்பக் கட்டணம்:
SC/ ST/ EBC/ பெண் – ரூ. 250
பொது/ஓபிசி பிரிவினருக்கு – ரூ. 500
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
அதிகாரபூர்வ அறிவிப்பு | CLICK HERE |
ஆன்லைன் விண்ணப்பம் | CLICK HERE |