TNPSC : Combined Technical Services Examination (Non – Interview Posts) – அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)காலியாக உள்ளஉதவி பொறியாளர் (மின்னியல்), உதவி பொறியாளர் (தொழிற்சாலை), உதவி நிலத்தியலாளர், மருத்துவ ஆய்வாளர், இளநிலை கட்டிட வடிவமைப்பாளர், இளநிலை மேலாளர், புள்ளியியல் ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர், என பல்வேறு பதவிகளுக்கு பல அரசு நிறுவனங்களின் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. Combined Technical Services Examination (Non – Interview Posts) பணியிடங்களை நிரப்புவதற்கான 654 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இப்பணிக்கு தகுதியானவர்களின்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.இப்பணிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனம்
Tamil Nadu Public Service Commission (TNPSC)
அரசு தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்தமிழ்நாடு
காலியிடங்கள்654
ஆரம்ப நாள்26.07.2024
கடைசி நாள்24.08.2024
SBI வங்கியில் வேலை வாய்ப்பு : அறிவிப்பு, விண்ணப்பிக்க – CLICK HERE

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Combined Technical Services Examination (Non – Interview Posts) மூலம் தேர்வாகும் பணியாளர்களுக்கு சம்பளம் ஆனது மாதம் ரூபாய் Rs.47,600 முதல் Rs.1,51,100 வரை இருக்கும். மொத்தம் காலியாக உள்ள 654  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில், தகுதியான ஆட்கள் விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 52 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என்பது வயதுவரம்பாக உள்ளது.

 தேர்வுமுறைCombined Technical Services Examination (Non – Interview Posts)
சம்பளம்மாதம் Rs.47,600 முதல் Rs.1,51,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை654
கல்வி தகுதிAny Degree, Master Degree, B.E/B.Tech
வயது வரம்பு18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 52 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
 ஆதாரச் சான்று  :   தேர்வர்கள் தங்களின் பிறந்த தேதி, தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியம் அல்லது தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட சான்று, பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலுடன் சரிபார்க்கப்படும்.
பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் தேர்வர்களின் பிறந்த தேதி குறிப்பிடாமல் இருந்தால் தேர்வர்கள் தங்களின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ் அல்லது பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல் போன்ற ஆவணங்களை தங்களது பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலுக்கு மாற்றாக பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.வேறு எந்தவித ஆதாரமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அல்லது சமர்ப்பிக்க தவறினால், பணியாளரின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தகுந்த நடைமுறைகளுக்கு பின்னர் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: One Time Registration Fee – Rs.150/-, Examination Fee – Rs.100/-
SC, SC(A) and ST / Destitute Widow / PwBD – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 
எழுத்து தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
அதிகாரப்பூர்வமான இணையதளம்CLICK HERE
 அதிகாரப்பூர்வமான  அறிவிப்புCLICK HERE
 விண்ணப்ப படிவம் CLICK HERE

Leave a Comment