தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்கும் கடலூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் (District Climate Change Mission – Cuddalore) சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே வழங்கப்பட்டுள்ள முழு விவரங்களை சரிபார்த்து உரிய தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய விவரங்கள் (Overview)
| பணி வழங்கும் அமைப்பு |
District Climate Change Mission, Cuddalore (TN Govt) |
| பதவியின் பெயர் |
Technical Assistant (தொழில்நுட்ப உதவியாளர்) |
| மொத்த காலியிடங்கள் |
01 |
| பணியிடம் |
கடலூர் மாவட்டம் (Cuddalore, Tamil Nadu) |
| மாத சம்பளம் |
₹22,000/- |
| விண்ணப்பிக்கும் முறை |
மின்னஞ்சல் (Email) / தபால் (Offline) / நேரில் |
| விண்ணப்பிக்க தொடக்க நாள் |
25.09.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் |
30.09.2026 |
கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் (Educational Qualification & Experience)
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பின்வரும் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்:
| பதவி |
கல்வித் தகுதி |
| Technical Assistant |
- Bachelor’s Degree in Biological Sciences / Environmental Science / Ecology / Forestry / Wildlife Science / Public Policy அல்லது தொடர்புடைய துறை.
- அல்லது M.A. English முடித்திருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சுத் திறன் அவசியம்.
- குறைந்தது 1 வருடம் அரசு துறை அல்லது அலுவலக பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- MS Office, Data Entry மற்றும் ஆவண பராமரிப்பு திறன் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
- குறிப்பு: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை/வாய்ப்பு.
|
வயது வரம்பு (Age Limit)
| பதவி பெயர் |
அதிகபட்ச வயது வரம்பு |
| Technical Assistant |
அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். |
விண்ணப்பக் கட்டணம் & தேர்வு முறை (Application Fee & Selection Process)
| விண்ணப்பக் கட்டணம் |
கட்டணம் ஏதுமில்லை (Free for All) |
| தேர்வு செய்யப்படும் முறை |
1. தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் பரிசீலனை (Shortlisting)
2. தட்டச்சுத் தேர்வு (Typing Skill Test)
3. நேர்முகத் தேர்வு (Interview)
|
விண்ணப்பிக்கும் நடைமுறை (How to Apply)
- விண்ணப்பதாரர்கள் தங்களின் புதுப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் (Updated Resume / CV) மற்றும் தொடர்புடைய கல்வி, அனுபவ சான்றிதழ்களின் நகல்களை தயார் செய்துகொள்ள வேண்டும்.
- மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர்: சான்றிதழ்களை இணைத்து cmgfp.cud@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சலின் தலைப்பில் (Subject) “Application for Technical Assistant – District Climate Change Mission, Cuddalore” எனக் குறிப்பிட வேண்டும்.
- தபால் அல்லது நேரில் விண்ணப்பிக்க விரும்புவோர்: விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு 30.09.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்:
முகவரி:
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்,
மாவட்ட வன அலுவலகம் / மாவட்ட ஆட்சியரகம்,
கடலூர் – 607001.
முக்கிய இணைப்புகள் (Important Links)